சென்னை புத்தக கண்காட்சி நிறைவு.. புத்தக விற்பனை எத்தனை கோடி?
Publish Date: Mon, 23 Jan 2023 (07:33 IST)
Updated Date: Mon, 23 Jan 2023 (07:35 IST)
சென்னை புத்தக கண்காட்சி நிறைவடைந்ததாகவும் ரூ.16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளதாகவும் பபாசி செயலாளர் எஸ்கே முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் ரூபாய் 16 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளது என்றும் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என்றும் எஸ்கே. முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சியில் கடந்த ஆண்டு 10 கோடிக்கு மட்டுமே புத்தகம் விற்பனையானது என்றும் இந்த ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆகிறது என்றும் பாபாஜி தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்