சென்னை - பெங்களூரு சதாப்தி ரயில் இனி இந்த ஸ்டேஷனில் நிற்கும்: அமைச்சர் எல்.முருகன்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (09:34 IST)
சென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இனி ஜோலார்பேட்டையில் நிற்கும் என மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
 
வாரத்தின் ஆறு நாட்கள் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை மற்றும் பெங்களூர் இடையே பயணம் செய்து வருகிறது என்பதும் பயணிகளின் பெறும் ஆதரவை இந்த ரயில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த ரயில் ஜோலார்பேட்டையில் நிற்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் இந்த கோரிக்கைக்கு ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. 
 
இதனை அடுத்து ஜூன் ஜூலை 9ஆம் தேதி முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் நிற்கும் என்றும் தொடக்க விழாவை அமைச்சர் எல் முருகன் தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
சென்னை பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 7 49 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

பங்குச் சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி இன்று உயர்வு!

மூன்று முறை உத்தரவு பிறப்பித்தும் அதனை அரசு ஏன் நிறைவேற்றவில்லை? தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments