Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்: அண்ணாசலையில் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

Mahendran
வியாழன், 14 மார்ச் 2024 (11:04 IST)
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தற்போது சென்னை அண்ணா சாலையில் இன்று முதல் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி
சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பட்டுலாஸ் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் இருந்து ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
 
அதேபோல் ராயப்பேட்டை பகுதியில் இருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தில் மாற்றம். அதாவது அண்ணா சாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள் ஸ்மித் சாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் அருகே 4 கிராமங்களில் உள்வாங்கிய கடல்.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பயண திட்டத்தை மாற்றுங்கள்.. சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்புபவர்களுக்கு அறிவுரை..!

இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை.. அவரது மனைவிக்கு 7 ஆண்டுகள் சிறை - பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு..!

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள்: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments