''சென்னை 384: இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக மாற்ற கடுமையாக உழைப்போம்!'' - ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (13:26 IST)
தமிழகத்தில் தலைநகரான  சென்னைக்கு இன்று  384 ஆம் பிறந்தநாள். இதையொட்டி தலைவர்கள்  பலரும் வாழ்த்துகள் கூறி வரும் நிலையில், ‘இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநகராக  மாற்ற கடுமையாக  உழைப்போம்’ என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்

இதுபற்றி அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சென்னை மாநகருக்கு இன்று 384-ஆம் பிறந்தநாள். சென்னப்ப நாயகர் உள்ளிட்ட சிலரின் நிலங்களை வாங்கி  அதில் சென்னை மாநகரத்தை  அமைப்பதற்கான அனுமதி பத்திரம் கையெழுத்திடப்பட்ட நாளே சென்னை நாளாக கொண்டாடப்படுகிறது. சென்னை நாள்  கொண்டாடும் சென்னை மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 384 ஆண்டுகளில் சென்னை அடைந்த வளர்ச்சி வியக்கத்தக்கது. இந்திய காவல்துறை இங்கு தான் உருவாக்கப்பட்டது; சென்னை தான் இந்தியாவின் பழமையான (மா)நகராட்சி.  சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது. இந்தியாவின் வளர்ச்சியடைந்த  மாநகராக சென்னை மாற வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க நாம் அனைவரும்  உறுதியேற்போம்!’’என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments