கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அதிக மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்