Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"அறநிலையத்துறை வசூல்ராஜா வேலை மட்டுமே செய்கிறது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை காட்டம்..!!

Madurai Court

Senthil Velan

, வியாழன், 26 செப்டம்பர் 2024 (15:41 IST)
இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிக்காமல், வசூல் ராஜா வேலையை மட்டும் செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மிகவும் பழமையானது. பிரசித்தி பெற்றது. விதிப்படி இக்கோவிலில் 12 குருக்களும், 19 உதவி குருக்களும் பணிகள் இருக்க வேண்டும். 
 
ஆனால் தற்போது 2 குருக்களும், 7 உதவி குருக்களும் மட்டுமே பணியில் இருக்கின்றனர். 100 கோடிக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் கிடைக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை வருமானத்தில் கவனம் செலுத்தும் அளவிற்கு, கோவில் பராமரிப்பு, பணியிட பூர்த்தி போன்றவற்றில் கவனம் செலுத்துவதில்லை. 
 
குருக்கள் பணியிடம் மட்டுமன்றி மணியம் ரிக் வேத பாராயணம், பாகவதர் உள்ளிட்ட 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. பல சந்ததிகளில் குருக்கள் இல்லை. எனவே ராமநாதசுவாமி கோவிலின் பணியிடங்களை நிரப்பி பூஜைகள் உள்ளிட்டவை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
 
இந்த வழக்கை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு இன்று விசாரித்தனர். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை என்று குற்றம் சாட்டிய நீதிபதிகள், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் வேலை மட்டுமே செய்கிறது என விமர்சித்தனர். 
 
மேலும், ராமநாதசுவாமி கோவிலுக்கு அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டனர்? ஆண்டு வருமானம் எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினர்.

 
மேலும் ஊதியம் மற்றும் பராமரிப்பு போக மீதமுள்ள தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது? கோவிலில் உள்ள சந்நிதிகள் எத்தனை? என்பது தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையின் ஆணையர், அருள்மிகு ராமநாதசுவாமி கோவிலின் செயல் அலுவலர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 14ம் தேதி ஒத்திவைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, 7 மாவட்டங்களில் மழை! வானிலை எச்சரிக்கை..!