Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் ரயில் போக்குவரத்தில் மாற்றம்: முக்கிய அறிவிப்பு..!

Siva
புதன், 11 டிசம்பர் 2024 (13:55 IST)
தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
திண்டுக்கல்-திருச்சி ரயில் பாதை பிரிவில் ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக மதுரை கோட்டம் சார்பில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
அதன்படி செங்கோட்டையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 14, 17, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில் (16848), நாகர்கோவிலில் இருந்து நாளை புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரயில் (16352), குருவாயூரில் இருந்து இன்று மற்றும் 13, 16, 27, 30 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹவுரா விரைவு ரயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 13-ந்தேதி புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
 
நாகர்கோவிலில் இருந்து வருகிற14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.மயிலாடுதுறையில் இருந்து வருகிற 14-ந்தேதி புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (16847), கச்சக்குடாவில் இருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரயில் (07435), சென்னை எழும்பூரில் இருந்து 14-ந்தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் (16127) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
 
நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து வருகிற 28, 31-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321-16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். 
 
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.",
    
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments