தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
திங்கள், 2 செப்டம்பர் 2024 (07:55 IST)

தென்கிழக்கு பருவமழை, வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

 

இந்நிலையில் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments