Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (08:22 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி காரணமாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் தகவலின்படி இன்று முதல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இன்று, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சென்னை, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, மதுரை, கன்னியாகுமரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 35 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் வீட்டில் பாலியல் தொழில்; சென்னையில் சிக்கிய கும்பல்!

கடலில் மூழ்கிய மீனவர்களின் படகு.. மீட்க சென்ற படகும் மூழ்கியதால் பரபரப்பு..!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 34 வயது பெண்.. சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்..!

ராமதாஸை அடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கும் வேலையில்லை.. அமைச்சர் சேகர்பாபு..!

டெல்லி பிவிஆர் தியேட்டர் அருகில் திடீரென வெடித்த மர்ம பொருள்.. தீவிரவாதிகள் சதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments