Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (14:52 IST)
தமிழகத்தில் இன்று முதல்  5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்கு திசைக்காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் . வரும் ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு பகுதிகளில லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்திலுள்ள மலைப்பகுதிகளில் வரும் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மிதமானமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புற நகர்ப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments