6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. குடையுடன் வெளியே செல்லுங்க..!

Siva
செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (08:35 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 
 
இன்று காலை 10 மணி வரை இந்த மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்லவும்.
 
மேலும், காரைக்கால் பகுதியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த மழைப்பொழிவு, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கு நன்மை பயக்கும் என விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த திடீர் மழை, கடும் வெப்பத்தில் இருந்து மக்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments