இன்றைக்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Prasanth Karthick
திங்கள், 15 ஜூலை 2024 (09:08 IST)

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments