Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வாழ்த்துக்கள்: அமைச்சர் பியூஷ் கோயல்

Siva
ஞாயிறு, 7 ஜனவரி 2024 (11:32 IST)
தமிழ்நாட்டின் உயர்ந்த இலக்கான ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விரைவில் அடைய வாழ்த்துகிறேன் என உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.
 
தமிழ்நாடு கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், இயற்கை வளத்திலும் வளம் கொண்ட மாநிலமாகும் என்றும், சென்னை வர்த்தக மையத்தை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து உருவாக்கி உள்ளது, நாட்டின் வளர்ச்சிக்கு இது போன்று இணைந்து செயல்படுவது அவசியம் என்றும்  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
 
மேலும் ஆதித்யா எல்.1 விண்கலம் தனது இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது, இதற்கு முக்கிய பங்காற்றிய தமிழகத்தை சேர்ந்த திட்ட இயக்குநர் நிகர் சாஜிக்கு எனது பாராட்டுகள் என்றும், இந்தியாவின் மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி கூறினார் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் பிரதமர் மோடி தமிழ் கலாச்சாரத்தின் மேல் பெரிதும் ஈடுபாடு கொண்டவர், அதனாலேயே நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அடையாளமான செங்கோல் உள்ளது என்றும்  மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது உரையில் கூறினார்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உசிலம்பட்டி சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்! அள்ளிச்சென்ற மக்கள்!

சிபிஎஸ்இ நியனமன தேர்வில் இந்தித் திணிப்பு.. மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம்..!

காதலை ஏற்க மறுத்த 14 வயது சிறுமி.. ஜாமினில் வெளிவந்து வெட்டி கொலை செய்த இளைஞர்..!

கனமழை காரணமாக நிலச்சரிவு.. சிம்லாவில் 80 சாலைகள் மூடப்பட்டன..!

பஜாஜ் நிறுவனத்தின் அட்டகாசமான CNG பைக்! Bajaj Freedom 125 CNG அறிமுகம்! – சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

அடுத்த கட்டுரையில்
Show comments