சென்னையில் அதிகரிக்கும் கொரோனா; எச்சரித்த மத்திய அரசு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (14:35 IST)
சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக மெல்ல குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பாதிப்புகளும் ஆயிரத்தை நெருங்கியுள்ளன. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. சென்னையின் ஒரு பகுதியில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து கடிதம் வந்துள்ளது. அதில் சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டி தீவிர கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments