Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம்! – யார் யாருக்கு கிடையாது?

Advertiesment
கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம்! – யார் யாருக்கு கிடையாது?
, செவ்வாய், 7 டிசம்பர் 2021 (09:31 IST)
மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள புதிய திருத்தங்களின்படி கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவியுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வழக்கு ஒன்றில் ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்றம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி 2015ம் ஆண்டு இலவச நிவாரண உதவி என்பதில் திருத்தங்களை மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த நிவாரண உதவி முன்னதாக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் பெற்ற முன்கள பணியாளர்கள் குடும்பங்கள், பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ஒருவரை மட்டும் இழந்து ரூ.3 லட்சம் பெற்றவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவுக்கு 2 தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர்தான்: ஜோதிமணி எம்பி