Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டுல பட்டாசு வெடிக்க தடை? பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்! – கலக்கத்தில் தீபாவளி கொண்டாட்டம்!

தமிழ்நாட்டுல பட்டாசு வெடிக்க தடை? பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்! – கலக்கத்தில் தீபாவளி கொண்டாட்டம்!
, வியாழன், 5 நவம்பர் 2020 (09:49 IST)
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து கருத்து தெரிவிக்க 18 மாநிலங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் விமரிசையாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இருக்கும் இந்த சமயத்தில் காற்று மாசுபாடும் அதிகம் உள்ளதால், காற்று மாசு உள்ள டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்வது குறித்து பசுமை தீர்ப்பாயம் ஆலோசனை மேற்கொண்டது.

இந்நிலையில் பட்டாசு தடையை காற்று மாசு உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்ய பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் பட்டாசு தடை செய்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களில் தடை விதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பட்டாசு வியாபாரிகளும், பொதுமக்களும் உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் திருச்சி, தூத்துக்குடி ஆகியவை அதிக காற்று மாசுள்ள நகரங்கள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன்லி எடைக்குறைவுதான்; நோ திருட்டு?! – ராமேஸ்வரம் கோவில் நிர்வாகம் விளக்கம்!