Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

84 லட்சம் பேர் பயன்...அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு !

Advertiesment
84 லட்சம் பேர் பயன்...அம்மா உணவகத்திற்கு மத்திய அரசு பாராட்டு !
, புதன், 29 ஏப்ரல் 2020 (15:10 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களும் வேலையின்றி வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்கிவருகிறது. சேலம், திருவாரூர் மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் ஆதரவற்றவர்களுக்கு இலவச உணவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சென்னையிலும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள் உணவு தேவைக்காக அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சென்னை மாநகர ஆணையர் பிரகாஷ் ”தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்பட்டும். இலவச உணவு உண்ண வருபவர்கள் தங்கள் பெயர் விவரங்களை கொடுத்து விட்டு உணவு உண்டு செல்லலாம்.” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் அம்மா உணவகம் தனித்துவம் மிக்கதாகச் செயல்படுவதாக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. அம்மா உணவகத்தில் , தினக்கூலிகள், ஓட்டுநர்கள், மற்றும் வெளி,மாநில தொழிலாளர்கள்  சாப்பிட்டு வருகின்றனர். இதன் மூலம் 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய அரசின் ஸ்வச்  பாரத் மிஷன் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிட் 19 விளையாட்டை தடை செய்த சீனா - ஏன் தெரியுமா?