Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபோனி புயல் முன் எச்சரிக்கை: தமிழகத்திற்கு ரூ.309.375 கோடி நிதி ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (12:23 IST)
ஃபோனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.309.375 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

 
 
இன்று காலை நிலவரத்தின்படி வங்க கடலில் ஃபானி புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 690 கிமீ தொலைவில் இருந்தது. ஏற்கனவே கணித்தது போல இன்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
 
இந்த புயல், சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம் வரை வந்து பிறகு திசை மாறி, ஒடிசா கடற்கரை நோக்கி சென்று, வரும் 4 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
காற்றின் வேகத்தை பொறுத்தவரையில், வடதமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசும். மாலை நேரங்களில் 50 கிமீ வேகத்திலும், சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
 
குறிப்பாக புயல் தாக்கத்தால், இன்று முதல் சென்னை உட்பட வட தமிழகத்தில், மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஃபோனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 
 
தமிழகம்: ரூ.309.375 கோடி
ஆந்திரா: ரூ.200.25 கோடி
ஒடிசா: ரூ.340.875 கோடி
மேற்கு வங்கம்: ரூ.235.50 கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments