Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய சென்னையில் முந்துகிறாரா பாஜக வேட்பாளர்.. தயாநிதி மாறனுக்கு சிக்கலா?

Mahendran
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (17:47 IST)
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோத் செல்வம் முந்துவதாகவும் தயாநிதிமாறனுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் மிக எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்றும் தயாநிதி மாறனுக்கு அந்த தொகுதியில் உள்ள செல்வாக்கு மற்றும் கூட்டணி பலம் ஆகியவை காரணமாக அவர் தேர்தல் பிரச்சாரமே செய்யாமல் இருந்தால் கூட வெற்றி பெற்றுவார் என்று தான் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர். 
 
ஆனால் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை பார்க்கும்போது வினோத் செல்வம் முந்துவதாகவும் அவர் தீவிர பிரச்சாரம் செய்வது மக்கள் மத்தியில் ஆதரவை பெற்று தருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு டைம்ஸ் என்ற ஊடகம் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 32 சதவீத வாக்குகளும், திமுகவுக்கு 30 சதவீத வாக்குகளும் ,அதிமுகவுக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது
 
இதன்படி ஓட்டுக்கள் விழுந்தால் பாஜக வேட்பாளர் வினோத் செல்வம் பாராளுமன்ற எம்பி ஆகிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தேர்தல் முடிவு வரும் ஜூன் 4ஆம் தேதி வரை பொறுமை காப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரஜினியை சந்தித்ததே அரசியல்தான்.. அரசியலுக்காகதான்! - சீமான் குடுத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments