Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீர் மற்றும் வேளாண் நிலைத்தன்மை மையம் சர்வதேச மாநாடு!

நீர் மற்றும் வேளாண் நிலைத்தன்மை மையம் சர்வதேச மாநாடு!

J.Durai

, புதன், 9 அக்டோபர் 2024 (08:46 IST)
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையம் மற்றும் உலக நிலத்தடி நீர் விஞ்ஞானிகள் சங்கத்தின் ஒத்துழைப்பில்,
காலநிலையியல் மாற்றங்களுக்கான நீர் மற்றும் வேளாண் நிலைத்தன்மை – WASCC 2024" என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்றது.
 
இம்மாநாடு, நீர் மற்றும் வேளாண் துறையில் புதிய புவியியல் தொழில்நுட்பங்களை அறிந்து பகிர்ந்து கொள்வதற்கான சிறப்பான தளமாக அமைந்தது. நீர் பின்புலத்தில், நிலத்தடி நீர் மேலாண்மை, நீர் பயன்பாட்டு திறன், சூழலியல் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ள அபாயங்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகள் மாநாட்டில் ஆராயப்பட்டன.
 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர். வி. கீதாலட்சுமி, இம்மாநாட்டை தலைமை ஏற்று, நீர் மற்றும் வேளாண் நிலைத்தன்மை குறித்து கவனம் செலுத்தும் சர்வதேச மாநாட்டிற்கு தன் முழு ஆதரவை மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்தார்.
 
மாநாட்டைத் தொடங்கி வைத்த தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் திட்ட இயக்குநர் தென்காசி ஜவஹர் IAS.
 
நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையத்தின் நீண்டகால பங்கையும், TNIAM திட்டத்துடனான வலுவான இணைப்பையும் வலியுறுத்தினார்.
 
மாநாட்டின் பிரதான விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தலைவர், டாக்டர் சுனில் குமார் அம்பஸ்த், நீர் மற்றும் பயிர் தொடர்பான ஆராய்ச்சிகளில் மையத்தின் பங்கிற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
 
கனடா, ஒன்டாரியோ, குவெல்ப் பல்கலைக்கழகத்திலிருந்து டாக்டர். எட்வர்ட் மெக்பீன் சிறப்புரையை வழங்கினார். பல சர்வதேச விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். நீர் மற்றும் புவிசார் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர், டாக்டர். எஸ். பழனிவேலன், மற்றும் டாக்டர். கே. பழனிசாமி, மூத்த விஞ்ஞானி (IWMI) ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைப் தெரிவித்தனர்.
 
மேலும் அனைவரும் மாநாட்டின் ஆய்வு சுருக்க நூலை வெளியிட்டனர். மேலும் டாக்டர் டி. சுரேஷ் குமார், இயக்குநர், CARDS, TNAU நன்றியுரை கூறினார். 
 
பின்னர், இரண்டு அறிஞர்கள் டாக்டர் எட்வர்டு மெக் பீன் மற்றும் டாக்டர் பி. வெங்கடேஸ்வர ராவ், எமெரிடஸ் பேராசிரியர், WTC, ஹைதராபாத் ஆகியோரால் இரண்டு தொடக்க சொற்பொழிவுகள் நடைபெற்றன. 
 
இவை மாற்றம் ஏற்படும் காலநிலைக் காட்சிகளில் நீர்வளங்களின் நிலைத்தன்மையைப் பற்றி, மேலும் விவசாய வறட்சியை எதிர்க்க மேக உமிழ்வு தொழில்நுட்பத்தின் மூலம் மழை அதிகரிப்பை நோக்கி விவாதித்தனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொல் திருமாவளவன்  நடத்திய மாநாடு ஒரு போலி மது ஒழிப்பு மாநாடு- பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்....