கொரோனா குறித்த மு.க.ஸ்டாலின் நடவடிக்கை! – அமெரிக்காவிலிருந்து செலின் கவுண்டர் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (10:58 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை சமயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்கவாழ் தமிழ் பெண் மருத்துவ ஆராய்ச்சியாளர் செலின் கவுண்டர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதுடன் கொரோனா சிக்கலிலிருந்து மீள பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்கா வாழ் தமிழ் வம்சாவளி பெண் மருத்து ஆராய்ச்சியாளரான செலின் கவுண்டர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள கொரோனா சிகிச்சை செலவுகளை அரசே ஏற்பது, கொரோனா நிவாரண நிதி வழங்குதல் மற்றும் பால் விலை குறைத்தல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி பாரட்டப்பட வேண்டிய முதற்கட்ட நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 59 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்: தமிழக காவல்துறையில் அதிரடி நடவடிக்கை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

காட்டில் எரிந்து கிடந்த இளம்பெண்.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு..!

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments