196 கருணை மதிப்பெண்களுக்கு சிக்கல்: நாளை மேல்முறையீடு செய்கிறது சி.பி.எஸ்.இ?

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (20:45 IST)
நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கேள்வித்தாளில் மொழிபெயர்ப்பு பிழை இருந்ததால் 196 கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பால் மீண்டும் மதிப்பெண் பட்டியல் தயாரித்து மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டிய நிலை சி.பி.எஸ்.இக்கு உள்ளது 
 
புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டு மீண்டும் மருத்துவ கவுன்சிலிங்கை நடத்துவது எப்படி சாத்தியமாகும் என்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நாளை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சி.பி.எஸ்.இ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆனால் அதே நேரத்தில் இந்த வழக்கை தொடுத்து வெற்றியும் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவரும், மேல்சபை எம்.பி.யுமான டி.கே.ரெங்கராஜன் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் சுப்ரீம் கோர்ட் உடனடியாக உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் டி.கே.ரெங்கராஜன் தரப்பு வாதத்தை கேட்ட பின்னரே தீர்ப்பை வழங்க முடியும். இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments