ஏற்கனவே சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என அறிவித்த நிலையில் தற்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மே மாதம் 4 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 7 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சில மாதங்கள் கழித்துத்தான் தேர்வுகள் நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் அளித்தது.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வரும் பிப்ரவரி 2 ம் அம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
மேலும் மே 4 ஆம் தேதி ஜூன் 10 ஆம் தேதிவரை தேர்வுகள் நடைபெறும் என்றும் இத்தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் எழுத்துத்தேர்வு நடைபெரும் வரை பள்ளியில் செய்முறை மற்றும் உள்மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்துவதற்கு அரசு அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ 10, மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தற்போது தெரிவித்துள்ளார்.
அதில், 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மே 4 ஆம் தேதி துவங்கி ஜூன் 11 ந்ஆம் தேதி வரை நடைபெறுகிறது.