எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

Siva
வியாழன், 11 ஜூலை 2024 (10:05 IST)
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

நூறு கோடி ரூபாய் சொத்து மோசடி வழக்கில் எம்ஆர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டு இருப்பதாக புகார் அளித்துள்ள நிலையில் அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய முன் ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவரது தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நெருக்கமான சிலருடைய வீட்டில் சமீபத்தில் சோதனை நடந்த நிலையில் தற்போது ஈரோடு மண்டல அதிமுக ஐடி விங் நிர்வாகி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கரின் நெருங்கிய உறவினரான கவின்ராஜ் வீட்டில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

அவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி கவின்ராஜிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments