Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் எச்சரிக்கை !

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:42 IST)
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி போலீஸார் எச்சரித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாணவி ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் அந்த உடலை 4 பேர் தூக்கி செல்லும் காட்சியின் சிசிடிவி வெளியாகியுள்ளது.

விடுதி உள்ளிட்ட 4 பேர் மாணவியின் உடலை தூக்கிச் சென்ற காட்சி உள்ள நிலையில் இந்த வீடியோ குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக  வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறியுள்ளதாவது; கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாராவதும் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிபிசிஐடி புலன்விசாரணையை பாதிக்கும் வகையில் யாரேனும் வீடியோ காட்சிகளை பதிவிடக் கூடாது; மீறினால் அவர்களின்  சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கப்படும் என எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments