Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 4 கோடி விவகாரம்: பாஜக முக்கிய நிர்வாகியை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்..!

Siva
ஞாயிறு, 5 மே 2024 (10:16 IST)
சென்னையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி  சிக்கிய வழக்கில் பாஜக மாநில நிர்வாகி கோவர்தனிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பாஜக மாநில தொழில்துறை பிரிவு தலைவர் கோவர்தனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் நேரில் சென்று விசாரணை செய்ய முடிவு என கூறப்படுகிறது. கோவர்தன் நடத்தி வரும் ரெஸ்டாரண்டில் பணம் பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அங்கு ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேற்று விக்னேஷ் என்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி உள்ள நிலையில் அனைவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் சிபிசிஐடி முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
முன்னதாக  ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments