Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு!

Advertiesment
சிவசங்கர் பாபா
, சனி, 13 நவம்பர் 2021 (11:53 IST)
சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையைத் திறந்து பார்க்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் உள்ள சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியில் மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அந்த பள்ளியின் உரிமையாளர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளியில் ஒரு ரகசிய அறை இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த ரகசிய அறையைத் திறந்து பார்க்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
இந்த அறையை திறப்பதற்கு சிவசங்கர் பாபாவின் கைரேகை தேவை என்பதால் அவரது கை ரேகையை எடுத்து ரகசிய அறையை திறக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளனர். இந்த அறையை திறந்தால் பல மர்மங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் மாணவியின் உடலை வாங்க மறுத்து போராட்டம்