பீகார் உள்பட ஒரு சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து முடித்து விட்டன. அதுமட்டுமின்றி தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணியையும் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக நீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல என்றும் அனைத்து மாநிலங்களின் பிரச்சனை என்றும் உரிமைக்காக போராடும் நிலை தற்போது உள்ளது என்றும் அதனால் இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்திய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சொன்னதிலிருந்து தமிழக அளவில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.