Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

Mahendran
வெள்ளி, 21 மார்ச் 2025 (11:33 IST)
தமிழில் அதிக பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்தவர் ஜி.கே ரெட்டி. இவரின் இளையமகன் விஷால். நடிகர் அர்ஜூனிடம் உதவி இயக்குனராக வேலை செய்த விஷால் செல்லமே படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அடுத்து வெளிவந்த திமிறு, சண்டக்கோழி படங்கள் இவரை பக்கா ஆக்சன் ஹீரோவா ரசிகர்களிடம் காட்டியது.

இந்த படங்களின் வெற்றி விஷாலை முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மாற்றியது. அதன்பின் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதேபோல், பல தோல்விப்படங்களையும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர் நடிக்கும் படங்களை இவரே தயாரிக்கவும் துவங்கினார். அதில் அவருக்கு பல கோடிகள் நஷ்டமும் ஏற்பட்டது.

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர் என தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய புள்ளியாக மாறினார் விஷால். ஆனால், இவர் மீது பல குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டது. அவ்வப்போது பரபரப்புக்காக சில விஷயங்களை செய்வார். சாப்பிடும் முன்பு பிரார்த்தனை செய்வது போல அவர் காட்டிய ரியாக்‌ஷன் அவரை ட்ரோலிலும் சிக்க வைத்தது. கடந்த சில வருடங்களாகவே அவரின் நடிப்பில் வெளியான பல படங்கள் ஓடவில்லை. பொங்கலுக்கு வெளியான மதகஜ ராஜா படம் மட்டும் ஓடியது.

இந்நிலையில்தான், விஷாலின் தங்கையின் கணவரும், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்கிறது. போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தொழிலதிபர் கிரிட்டிஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சுமந்தப்பட்டிருக்கிறது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments