Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி கலவரம் - ஸ்டாலின், கமல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு

Webdunia
வியாழன், 24 மே 2018 (10:55 IST)
144 தடை அமலில் இருக்கும்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கறிய கமல் மீது நேற்று வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்கொழுது ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துகுடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  கடந்த இரண்டு நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. போலீஸ் காரர்களின் இந்த அட்டூழியத்திற்கு பல தரப்பினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை கமல் நேரில் சென்று நேற்று ஆறுதல் தெரிவித்தார். 144 தடை அமலில் இருக்கும்போது கமல்ஹாசன் மக்களை சந்தித்து பேசியது தவறு என அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து நேற்று மக்களை சந்தித்த ஸ்டாலின், வைகோ, திமாவளவன், திருநாவுக்கரசர் ஆகியோர் மீதும் 144 தடை உத்தரவை மீறியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments