Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசு

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (20:37 IST)
மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் கார்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிஸான் மேக்னைட் என்ற  கார் பரிசாக வழங்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையொட்டி மக்கள் விடுமுறையில் தங்கள் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிலையில், தமிழ்நாட்டில்  பல இடங்களில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தப்பட்டு  வருகிறது.  

இன்று உலகப் புகழ்பெற்ற மதுரை அங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியைக் காண அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர், அருண்விஜய் ஆகியோர் நேரில் சென்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை முடிந்த 2024 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  அதிக காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார். இவர் இன்று 18 காளைகளை அடக்கினார். எனவே கார்த்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிஸான் மேக்னைட் என்ற  கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டில் 2 வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பூவந்தி அபிசித்தர் 2 வது இடம் பிடித்தார். இவர் கடந்தாண்டு முதலிடம் பிடித்திருந்தார்.

குன்னத்தூர் திவாகரன் 12 காளைகளை அடக்கி மூன்றாவது இடம் பிடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது இன்னொரு வழக்கு: மீண்டும் கைது செய்த போலீசார்..!

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொங்கல் தினத்தில் யுஜிசி நெட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. கடும் எதிர்ப்பு கிளம்புமா?

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments