Publish Date: Mon, 29 May 2017 (06:25 IST)
Updated Date: Mon, 29 May 2017 (06:34 IST)
குடிநீர் கேன்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்று முதல் சென்னை உள்பட பல நகரங்களில் குடிநீர் கேன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் நியாயமற்றது என்றும் பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வாபஸ் பெற வேண்டும்: என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த வரியை பயன்படுத்தி பொதுமக்களிடம் குடிநீர் கேனுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்பொழுதே ரூ.10 மதிப்புள்ள கேன்வாட்டாரை ரூ.30க்கு விற்பனை செய்து வருவதாகவும், கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தினால், அரசே ரூ.10க்கு குடிநீர் கேன் விற்பனை செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.