Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா புகைப்படத்தை வெளியிட்டாலே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?

ஜெயலலிதா புகைப்படத்தை வெளியிட்டாலே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?

ஜெயலலிதா புகைப்படத்தை வெளியிட்டாலே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே?
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (12:34 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 
 
முதல்வருக்கு என்ன ஆச்சு என தெரிந்துகொள்ள கட்சியினர் மருத்துவமனை முன்னர் குவியத்தொடங்கினர். இதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், தற்போது நலமாக உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
 
ஜெயலலிதா முழுமையாக குணமடைந்து விட்டார், அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்ற தகவல் வந்தது. ஆனால் அவர் எப்பொழுது வீட்டுக்கு செல்வார் என்ற தகவல் தெரியவில்லை. இதனையடுத்து அவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.
 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மீண்டும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முதல்வர் நலமாக உள்ளார் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்ற தகவலை கூறியது. ஆனாலும் நேற்று அவரது உடல்நிலை குறித்த வதந்தி தீயாக பரவியது.
 
இதனையடுத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவலை, வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என கூறும் போது அதில் திருப்தியடையாதவர்கள் வதந்தியை பரப்புகிறார்கள். அவர் நலமாக உள்ளார் என்பதை புரிய வைக்க அவரது புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே என சமூகவலைதளங்களில் பேசப்படுகிறது.
 
மாநில முதல்வரின் உடல் நிலைகுறித்து தெளிவான கருத்து இல்லாமல் இருக்கும் பொதுமக்களுக்கு, அச்ச உணர்வை போக்குவது அரசின் கடமை, முதல்வர் நலமாக இருக்கிறார், பூரண குணமடைந்துவிட்டார் என பலமுறை கூறுவதற்கு பதிலாக அவர் நலமுடன் இருக்கும் புகைப்படத்தையோ, அவர் பேசும் வீடியோவையோ வெளியிட்டால், நாட்டு மக்களின் அச்சம் நீங்கும், வதந்தி பரப்புவோர்க்கும் வாய்ப்பு இல்லாமல் போகும்.
 
இது ஒன்றும் தமிழகத்துக்கு ஒன்றும் புதிதல்ல, இதற்கு முன்னர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. அப்போது அவர் மருத்துவமனையில் உணவருந்துவது, மருத்துவர்களிடம் பேசுவது, கோப்புகளை பார்வையிடுவது போன்ற வீடியோவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரி மாணவனை கடத்தி மர்ம உறுப்பை வெட்டிய திருநங்கைகள் : அதிர்ச்சி தகவல்