Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்.ஜி.ஆர் சாதிக்காததை எடப்பாடி சாதிப்பாரா? – திருவாரூர் தொகுதி தேர்தல்கள் அலசல்..

எம்.ஜி.ஆர் சாதிக்காததை எடப்பாடி சாதிப்பாரா? – திருவாரூர் தொகுதி தேர்தல்கள் அலசல்..
, வியாழன், 3 ஜனவரி 2019 (15:06 IST)
திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்தத் தொகுதியில் இதுவரை நடந்துள்ள தேர்தல்கள், அவற்றில் வெற்றி பெற்றக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்த அலசல் பார்வை.

திருவாரூர் தொகுதி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு முக்கியப்பகுதியாகும். காவிரிக் கரையோரம் இருப்பதால் விவசாயம் மற்றும் அது சார்ந்த கூலித் தொழில்கள் அதிகமாக நடக்கும் பகுதி. விவசாயம் செழிப்பாக  நடக்கும் இப்பகுதியில் பண்ணையார்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலகட்டங்களில் பண்ணையார்களின் ஆதரவைப் பெற்ற காங்கிரஸ் கோலோச்சியது. அதன் பின்னர் கீழ்வெண்மணி பிரச்சனையை அடுத்து அங்கு உழைக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றி அவர்களுக்கு கூலி உயர்வு உள்ளிட்டப் பல வசதிகளைப் பெற்றுத் தந்த கம்யூனிஸ்ட் கட்சி பத்தாண்டுகளுக்கு மேல் மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாக இருந்தது.  1990 களுக்குப் பிறகு மெல்ல மெல்ல திமுக வின் கைக்கு சென்ற இந்த தொகுதி இப்போது திமுக வின் கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 1996-க்குப் பிறகு நடந்துள்ள 5 பொதுத் தேர்களில் ஒரு முறைக்கூட திமுக இந்த தொகுதியில் தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக நடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் திமுக தலைவர் கலைஞர் போட்டியிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
webdunia

இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் 1977-ல் இருந்து 1987 முதல் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்த எம்.ஜி.ஆரால் இந்த தொகுதியில் ஒருமுறைக் கூட தனது கட்சியை வெற்றிப் பெற வைக்க முடியவில்லை. அதன் பின்னர் ஜெயலலிதா தலைமையிலும் அதிமுக இந்த தொகுதியில் வெற்றிப்பெற இயலவில்லை. இதையடுத்து இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எடப்பாடித் தலைமையிலான அதிமுக அரசுப் போட்டியிட இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரால் சாதிக்க முடியாததை எடப்பாடி சாதிப்பாரா என்றக் கேள்வி இப்போது எழுந்துள்ளது.

நடைபெற்றத் தேர்தல்கள் மற்றும் வெற்றிபெற்றவர்கள் விவரம்
  1. 1962- சி.எம். அம்பிகாபதி- காங்கிரஸ்
  2. 1967- தனுஷ்கோடி-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
  3. 1971 - எம்.கருணாநிதி தாழாய் – திமுக
  4. 1977- எம்.கருணாநிதி தாழாய் – திமுக
  5. 1980 - செல்லமுத்து- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
  6. 1987 - செல்லமுத்து- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
  7. 1989 – தம்புசாமி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
  8. 1991 - தம்புசாமி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
  9. 1996 – அசோகன் – திமுக
  10. 2001 - அசோகன் – திமுக
  11. 2006 – மு கருணாநிதி – திமுக
  12. 2011 - மு கருணாநிதி – திமுக

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூகுள் மேப்ஸில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பலாம் ...