Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? ஜெயக்குமார்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (14:50 IST)
அடுத்தாண்டு  பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள்  கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

அதேபோல், பாஜக தலைமையிலான பல கட்சிகள் இணைந்துள்ளனர். சமீபத்தில் இக்கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். சமீபத்தில், அமித்ஷாவுடன் அவர் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் கருத்து மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில், பாஜக கட்சி தலைவர்களுக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் நீடித்து வந்தன.

இந்த நிலையில்,  இன்று செய்தியாளர்களுகு பேட்டியளித்த ஜெயக்குமார், ''பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை.  தேர்தல் வரும்போதுதான் அடை டிசைட் செய்ய  முடியும். அதிமுக தலைவர்களை  பற்றி அண்ணாமலை பேசினால் தக்க விளைவுகளை சந்திக்க  நேரிடும்; தனித்துப் போட்டியிட்டால் நோட்டா ஓட்டு கூட வாங்க மாட்டார் அண்ணாமலை. அவருக்கு தகுதிக்கு மீறி பதவி வழங்கப்பட்டுள்ளது.தன்னை முன்னிலைப்படுத்தி, தலைவர்களை அசிங்கப்படுத்துகிறார். பலமுறை எச்சரித்தும் அலட்சியப்படுத்துகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''அண்ணாமலை , தனியாக ஒரு தொகுதியில் நின்று வெற்றி  பெற முடியுமா? நோட்டாவுக்கு கீழேதான் வாக்கு பெறுவார்…பிஜேபியால் காலூன்ற முடியாது இங்கு... வரும் 2024 தேர்தலில்  பாஜக எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ் என்று கடுமையான விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments