Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகங்களில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கலாமே? அண்ணாமலை யோசனை

Siva
செவ்வாய், 28 ஜனவரி 2025 (17:08 IST)
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அம்மா உணவகங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு 21 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் அவ்வாறு மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை தயாரிக்கலாம். அதை விட்டுவிட்டு ஏன் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

சென்னையில் உள்ள சுமார் 350க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?

கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

சென்னை அருகே தைவானிய தொழில் பூங்கா.. 50 ஆயிரம் + வேலைவாய்ப்புகள்..! - அமைச்சர் டிஆர்பி ராஜா சூப்பர் 20 அறிவிப்புகள்!

மகளிர் உரிமைத்தொகை: விடுபட்டவர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்: முதல்வர் தகவல்..!

யாராலும் நாங்கள் மிரட்டப்படவில்லை: ஆளுனர் குற்றச்சாட்டுக்கு துணை வேந்தர்கள் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments