Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசின் (TRAI) அமைப்பை கண்டித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!

மத்திய அரசின் (TRAI) அமைப்பை கண்டித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!
, வியாழன், 18 மே 2023 (14:56 IST)
மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆணையம் ட்ராய் அமைப்பினை கண்டித்து பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
குறிப்பாக மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆணையம் அமைப்பு என்டிஓ 3 பரிந்துரையின் விளைவாக கட்டண சேனல்கள் மிக கடுமையான கட்டண உயர்வை அறிவித்தது. எம் எஸ் ஓ நிறுவனங்கள் அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு மேற்கொண்டு கட்டணத்தை ஏற்றி பொதுமக்களுக்கு கேபிள் டிவி கட்டணம் உயர்த்த பட்டது இதனால் பொதுமக்களும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழிலும் பாதிக்கப்பட்ட நிலையில் என் டி ஓ 3 பரிந்துரையை நிறுத்தி வைத்து கேபிள் டிவி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
 
எதிர்காலத்தில் இந்திய தொலைத்தொடர்பு ஆணையம் கொண்டுவரும் பரிந்துரையை பொதுமக்களும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழிலும் பாதிக்காத வண்ணம் இருக்கிறதா என்று மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
 
லீனியர் சேனல்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது என் என்கிற விதிமுறையை உயிரும் கட்டண சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இணைய வயர்களை எடுத்துச் செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட்டண குறைப்பை அறிவித்தது போல கேபிள் டிவிக்கும் அறிவித்து விட வேண்டும்.
 
உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம்''- டிடிவி. தினகரன்