Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்க தமிழ்செல்வன் இடத்தில் சி.ஆர்.சரஸ்வதி – டிடிவி தினகரன் அதிரடி

Advertiesment
தங்க தமிழ்செல்வன் இடத்தில் சி.ஆர்.சரஸ்வதி – டிடிவி தினகரன் அதிரடி
, வியாழன், 4 ஜூலை 2019 (18:45 IST)
தங்க தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகித்த கொள்கை பரப்பு செயலாளர் பணிக்கு சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தையடுத்து கட்சி நிர்வாகிகள் பலர் கலைந்து திமுகவுக்கும், அதிமுகவுக்கும் சென்று அடைக்கலமாகி விட்டனர். இதை பற்றி அலட்டிக்கொள்ளாத தினகரன் கட்சிக்காக பாடுபடும் மீதமுள்ளவர்களை கொண்டு கட்சியை பலப்படுத்த தொடங்கியுள்ளார். அதன்படி தனது கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அமமுக துணை பொது செயலாளராக பழனியப்பன் மற்றும் ரெங்கசாமி நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாளர் பதவியை வெற்றிவேலுக்கு வழங்கியுள்ளனர். இந்நிலையில் தங்க.தமிழ்செல்வன் வகித்த கொள்கை பரப்பு செயலாளர் பதவியை நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஏற்றுள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது “அம்மா இட்லி சாப்பிட்டார். நலமாக இருக்கிறார்” என்று சொல்லிவிட்டு, விசாரணை கமிஷனில் நான் மருத்துவமனையில் அம்மாவை பார்க்கவே இல்லை என பல்டி அடித்தது வரை பல விதங்களில் பிரபலமானவர் சி.ஆர்.சரஸ்வதி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபானம் அளவுடன் குடித்தால் உடலுக்கு நல்லது ! - அமைச்சர் அறிவுரை