Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்பொழுது? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (18:12 IST)
மக்களவை தேர்தலோடு சேர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
 
இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்து மக்களவை தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
 
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 11ந் தேதி தொடங்கி மே 19ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 2வது கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது மே 23ந் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மக்களவை தேர்தலோடு சேர்த்து ஏப்ரல் 18 ஆம் தேதி அன்றே தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments