Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசுப் பள்ளிக்கு ’பல கோடி நன்கொடை’ கொடுத்த தொழிலதிபர்...

Advertiesment
அரசுப் பள்ளிக்கு ’பல கோடி நன்கொடை’  கொடுத்த தொழிலதிபர்...
, வெள்ளி, 7 ஜூன் 2019 (14:49 IST)
உலகில்  தலைசிறந்த மென்பொருள் உற்பத்தியாளர் மற்றும் கணினி பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுவருவர் ஷிவ்நாடார். இவரது நிறுவனம் தான் பிரபல  ஹெச்.சி.எல் ஆகும்.
ஷிவ்நாடார் கடந்த 1953 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள இளங்கோ அரசுப்பள்ளியில் படித்தார். அவர் தான்  படித்த பள்ளிக்கு நன்கொடை கொடுத்ததன் விளைவாக தற்போது தனியார் பள்ளிக்களுக்கு இணையாக சிறப்புடன் திகழ்கிறது.
 
மேலும் இப்பள்ளியில் கம்பியூட்டர். லேப், பூங்கா, கழிவறைகள், குடிநீர் , மைதானம் போன்ற சகல வசதிகளையும் கொண்டபள்ளியாக இளங்கோ பள்ளி உருவெடுத்துள்ளது.
 
ஒருமுறை இப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரனை ஹெச்.சி.எல். நிறுவனர் ஷிவ்நாடார் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது இப்பள்ளிக்கு தான் எதாவது செய்வதாகக் கூறிவிட்டு ரூ. 15 கோடியை பள்ளி நிர்வாகத்துக்காகக் கொடுத்துள்ளார்.
 
இதனையடுத்து  இப்பள்ளியில் வேலைகள் மிகத்துரிதமாக நடைபெற்று தற்போது தனியாஅர் பள்ளிக்குச் சவால் விடும் நிலையில் உள்ளது என்பதுதான் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
 
தான் படித்த பள்ளிக்குப் பதினைந்து கோடி ரூபார் நன்கொடை கொடுத்து மதுரை இளங்கோ அரசுப் பள்ளியை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்திய ஷிவ் நாடாருக்குப் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவை மதிக்காத அதிமுக: ஏன் இந்த திடீர் எதிர்ப்பு?