Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுங்கட்சிக்கு எதிராக வீடியோ வெளியிட்டு தொழிலதிபர் தற்கொலை !

Webdunia
புதன், 22 மே 2019 (14:09 IST)
சென்னை மதுரவாயல் வெங்கடேஸ்வர நகரில் வசித்து வந்த ரியல் எஸ்டேட் அதிபரான சின்னராஜா தனது வீட்டில் அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது மனைவி அருகில் உள்ளவர்களின் துணையோடு கதவை உடைத்துகொண்டு உள்ளெ சென்று பார்த்தனர். சின்னராஜ் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 
சின்னராஜா தான் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது :
 
இந்த ஆட்சியில் இனி நாம் வாழ்வதெல்லாம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. பஞ்சாயத்து அப்ரூவல் நின்றது முதல் ரியஸ் எஸ்டேட் துறையில் உள்ள அனைவரின் வாழ்க்கையும் வீணாகி விட்டதாகவும் அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மன உளைச்சலோடு தான் தற்கொலை  செய்துகொள்வதாகவும் அதில் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிந்து போனவர்களை சேர்க்க முடியாது: செங்கோட்டையனின் கோரிக்கையை நிராகரித்த ஈபிஎஸ்?

4 சவரன் நகை திருட்டு: தி.மு.க பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது..!

முதல்முறையாக ஒரு கிராம் ரூ.10ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. ரூ.1120 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments