கரூரில் தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது குண்டர் சட்டம் பதிய வேண்டுமென்று பல்வேறு இயக்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய மாநில வழக்கறிஞர் அணியின் துணை செயலாளருமான பாஸ்கர் என்கின்ற பகலவன் கடந்த சில தினங்களாக அவருடைய கட்சிக்கு என்றும், ஆங்காங்கே அதிரடியாக வசூல் வேட்டை நடத்தியுள்ளார்.
அப்போது கரூர் நகரில் உள்ள பல்வேறு தொழிலதிபர்களையும், கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் உள்ள கொசுவலை, பஸ்பாடி, டெக்ஸ்டைல் உள்ளிட்ட நிறுவனங்களில் வசூல் செய்த கையோடு சிலர் பணம் தரமுடியாவிட்டால் கம்பெனியை கொழுத்திவிடுவதாகவும், இனி தொழில் செய்ய முடியாது என்றும் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 1 லட்சம் தருமாறு மிரட்டியதையடுத்தும் ஆங்காங்கே இவர் வசூல் செய்ய நான்குசக்கர வாகன சொகுசு ஜீப்பில் சென்று வந்த காட்சிகளும் அதிரடியாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் சி.சி.டி.வி காட்சிகள் அதிரடியாக பரவிய நிலையில்., கடந்த இரு தினங்களுக்கு முன்பு பசுபதிபாளையம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் வினு பெட் என்னும் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் சுரேஷ் பாலாஜி என்பவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரை கூறி ரூபாய் 50, 000 கேட்டு பாஸ்கர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சுரேஷ் பாலாஜி தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பாஸ்கர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாஸ்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கைது சம்பவத்தினை பல்வேறு இயக்க நிர்வாகிகளும், பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வரவேற்ற நிலையில் இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருந்தும் யாரும், புகார் கொடுக்க பயப்படும் நிலையை ஏற்படுத்திய நிலையில், இவரது கைதினை தொடர்ந்து இவருடன் வசூல் செய்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரசியல் கட்சியோ, இயக்கமோ நன்கொடை என்று நாகரீகமான முறையில் நடத்த வேண்டுமே தவிர, ஆங்காங்கே கட்டாய வசூல் செய்து தொழிலதிபர்களை மிரட்டக்கூடாது என்றும் கோரிக்கை வைத்த நிலையில், காவல்துறையினர் இது போல மிரட்டி பணம் கேட்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பாஸ்கர் என்கின்ற பகலவனை பசுபதிபாளையம் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த நிலையில் கரூரில் வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பசுபதிபாளையம் போலீஸாருக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். தொழிலதிபரிடம் கட்சியின் பெயரைக் கூறி ரூபாய் ஐம்பதாயிரம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் கைது இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.