போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் ஆனதை அடுத்து புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுக்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கை இன்னும் ஏற்கப்படவில்லை என்பதும், போனஸ் தொகை குறைக்கப்பட்டதால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி உடனடியாக அரசு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று முதல் முதல் அரசு பேருந்து ஓடவில்லை. சென்னையை பொறுத்தவரை 50 % பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து துறை சமீபத்திய தகவல் தெரிவித்துள்ளது.