Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிக்கெட் எடுக்காமல் சென்ற காவலர் – தட்டிக்கேட்ட நடத்துனர் நெஞ்சுவலி வந்து மரணம் !

டிக்கெட் எடுக்காமல் சென்ற காவலர் – தட்டிக்கேட்ட நடத்துனர் நெஞ்சுவலி வந்து மரணம் !
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (11:40 IST)
திருச்சியில் இருந்து கடலூர் செல்லும் பேருந்தில் பயணம் சென்ற போலிஸ் ஒருவர் டிக்கெட் எடுக்காமல் பயணம் சென்றதைத் தட்டிக்கேட்ட நடத்துனர் நெஞ்சுவலி வந்து மரணமடைந்துள்ளார்.

திருச்சியில் கடலூர் செல்லும் அரசுப்பேருந்தில் நேற்று முன் தினம் திட்டக்குடி காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அவரிடம் டிக்கெட் கேட்ட நடத்துனர் கோபிநாத்திடம் தானொரு காவலர் என சொல்லியுள்ளார். சீருடை அணியாமல் இருந்த அவரிடம் அடையாள அட்டையை நடத்துனர் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

ஒரு கட்டத்த்தில் வாக்குவாதம் முற்ற நடத்துனர் கோபிநாத் அந்த இடத்திலேயே நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் போலிஸ்காரரை மடக்கி வைத்திருக்க தகவலறிந்த போலீஸார் வந்து பழனிவேலைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரம்ப்க்கும், புதினுக்கும் இடையே மாட்டிக் கொண்டாரா மோடி?: பிரதமரின் ரஷ்ய பயணம்