Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் எதிரொலி: மாலை 6 - காலை 6 பேருந்துகள் இயங்காது!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (16:34 IST)
கஜா புயல் எதிரொலியாக புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய 7 மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் திசைமாரிய காரணத்தால் கடலூர் மற்றும் பாம்பன் பாலம் இடையே இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் கரையை கடக்க இருக்கிறது. புயலால் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.
 
இந்நிலையில், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய புயல் பாதிப்புள்ள பகுதிகளில் இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை பேருந்துகளை இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 
 
இதற்கு முன்னர், பாதிப்புள்ள மாவட்டங்கலில் பணிபுரியும் தனியார் மற்றும் அரசு ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடித்திருவாதிரை திருவிழா! கங்கைக் கொண்ட சோழபுரத்தில் ‘கங்கை புத்திரன்’ பிரதமர் மோடி! - முழு பயணத் திட்டம்!

மீண்டும் சொதப்பிய கூகுள் மேப்.. தவறான வழிகாட்டியால் ஓடைக்குள் விழுந்த கார்..!

பிரதமர் மோடி புதிய மைல்கல்: இந்திரா காந்தியை சாதனையை முறியடித்தார்..!

ஏராளமான போட்டிகள்.. இலவச பயிற்சிகள்.. கண்காட்சிகள்! களைகட்டும் நாகப்பட்டிணம் புத்தகத் திருவிழா!

கூட்டணியில இருந்தவங்களே வாழ்த்து சொல்லல! முதல் ஆளாக ராமதாஸை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்! - ஒருவேளை இருக்குமோ?

அடுத்த கட்டுரையில்
Show comments