பேஸ்புக் காதல்: மேரிக்குட்டி ஆண்ட்டியை காலி செய்த இளைஞர்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (16:23 IST)
கேரளாவில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுக்க மறுத்த பெண்ணின் தாயை வாலிபர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் குளத்துப்புழாவை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மேரிக்குட்டி என்ற மனைவியும் 2 மகள்களும் இருக்கிறார்கள். 
 
இவர்களது மூத்த மகள் லிசாவிற்கு பேஸ்புக் மூலம் மதுரையை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
 
இந்நிலையில் லிசாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதனால் லிசா சதீஷிடம் பேசுவதை முழுவதுமாக நிறுத்தியுள்ளார். சதீஷ் தொடர்ந்து முயற்சி செய்தும் லிசாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
 
இதனையடுத்து லிசாவின் வீட்டிற்கு சென்ற சதீஷ் அவரது தாயார் மேரிக்குட்டியிடம் லிசாவை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு மேரிக்குட்டி தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தான் வைத்திருந்த கத்தியால் மேரிக்குட்டியை சரமாரியாக குத்தி கொலை செய்தான்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சதீஷை கைது செய்தனர். பேஸ்புக் காதலால் ஒரு குடும்பமே சிதைந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து எடுக்கப்படுகிறதா?

போலி சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.. போலி சிபிஐ அதிகாரிகள்.. ரு.1.50 கோடியை இழந்த தம்பதி...!

அவர்கள் இன்போசிஸ் என்பதற்காக எல்லாம் தெரிந்தவர்களா? நாராயண மூர்த்திக்கு சித்தராமையா கண்டனம்..!

இருட்டு கடை அல்வா போல் உருட்டு கடை அல்வா.. திமுக குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

தவெக ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியே கிடையாது! ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments