Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரெவி புயல்: 8 மாவட்டங்களில் சுழற்றி அடிக்கும் சூறாவளி காற்று !

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:45 IST)
புயல் கரையை கடக்கும் போது 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என தகவல். 
 
வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற உள்ள நிலையில் மணிக்கு 13 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புதிய புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் தென் தமிழக பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
அதாவது, டிச.2 ஆம் தேதி மாலை இலங்கையின் திரிகோணமலையை கடக்கும் புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கும் வரும். அதன் பின்னர் புயல் டிச.4 ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி - பாம்பன் இடையே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
புயல் கரையை கடக்கும்போது 8 மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! நாகை - திரிகோணமலை இடையே மையம்..!

கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்! உடனடியாக காவல்துறை எடுத்த நடவடிக்கை..

பொங்கல் திருநாளில் ICAI தேர்வுகள்.. தேதி மாற்றம் குறித்த அறிவிப்பு..!

2 நாட்களில் சுமார் 2000 குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

பங்குச்சந்தை தொடர் ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments