புரெவி புயல் கரை கடப்பது எங்கே? எப்போது? வானிலை ஆய்வு மையம்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (16:31 IST)
தமிழகம் மற்றும் புதுவையை சமீபத்தில் நிவர் புயல் புரட்டி எடுத்த நிலையில் அந்த புயலினால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து இன்னும் பொது மக்கள் மீள முடியாமல் உள்ளனர் 
 
இந்த நிலையில் மீண்டும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புரெவி புயல் டிசம்பர் 4ம் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
இதனை அடுத்து டிசம்பர் 2 முதல் 4 வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புரெவி புயல் டிசம்பர் 4ஆம் தேதி குமரி மற்றும் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 
 
எனவே அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் குமரி மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் பலாத்காரம் செய்துவிடுவேன்: பெண் மருத்துவரை மிரட்டிய நோயாளியின் உறவினர் கைது..!

எகிறிய வேகத்தில் வீழும் தங்கம்! இன்னும் குறையுமா? காரணம் என்ன?

திருப்பதியில் கனமழை.. மழையிலும் குவிந்த பக்தர் வெள்ளம்! மழையில் நனைந்தபடி தரிசனம்..!

கனமழையால் காவிரி டெல்டாவில் குறுவை நெல் நாசம்: வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கிய ஈபிஎஸ்..!

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த மண்டலம்: புயலாக மாற வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments