Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரத்தில் கட்டுகட்டாக பணம்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

Mahendran
புதன், 5 மார்ச் 2025 (19:12 IST)
நெல்லை பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் இருந்த நிலையில், அந்த பணத்தை ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி எடுத்துச் சென்று உரியவரிடம் ஒப்படைத்ததாக வெளிவந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நெல்லை மாவட்டம், புதிய பஸ் நிலையத்தில், மாடசாமி என்ற காவல்துறை அதிகாரி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையில் கட்டு கட்டாக பணமும், கணினியும் இருந்ததை பார்த்தார்.
 
இதுகுறித்து அவர் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணம் பேச்சிமுத்து என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் அந்த பணமும் கணினியும் ஒப்படைக்கப்பட்டது.
 
நேர்மையான முறையில் பணத்தை  ஒப்படைத்த சிறப்பு எஸ்.ஐ. மாடசாமிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், அவரை காவல்துறை உயர் அதிகாரிகளும் பாராட்டியுள்ளார்கள்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments