Publish Date: Wed, 06 Nov 2019 (09:43 IST)
Updated Date: Wed, 06 Nov 2019 (09:48 IST)
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறிய நிலையில் இன்று ஒடிசாவை நோக்கி நகர உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதை அடுத்து புயல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஒடிசா, பங்களாதேஷ் ஆகிய பகுதிகளை நோக்கி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த புயலால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ஓரளவு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற்று வடக்கு ஒடிசாவை நோக்கி செல்லும் என கூறப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ள நிலையில், நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.